40 அப்பாவி பொதுமக்களை சித்ரவதை செய்து கொன்று புதைத்த மியான்மர் இராணுவம்..!



Myanmar Army Killed 40 Civilians Shocking News

இராணுவ ஆட்சி நடந்தும் வரும் மியான்மரில், அந்நாட்டு இராணுவம் 40 பொதுமக்களை சித்ரவதை செய்து கொன்று புதைத்த பரபரப்பு சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளன.

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து, அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உட்பட பல அரசியல் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஒரு வருடத்திற்கு அவசர நிலையையும் மியான்மர் நாட்டில் இராணுவம் பிரகடனம் செய்தது. 

கடந்த வருடத்தின் நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்த காரணத்தால் அதிகாரத்தை கைப்பற்றியதாகவும் இராணுவம் விளக்கம் அளித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத மக்கள் இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தை கையில் எடுத்தனர். 

மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத இராணுவம், மக்களின் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. தற்போது வரை அப்பாவி மக்கள் 1,500 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். உலக நாடுகளின் அழுத்தத்தையும் கண்டுகொள்ளாமல் இராணுவம் செயல்பட்டு வருகிறது. 

Myanmar

இந்த நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பாவி மக்களில் 40 பேரை இராணுவ வீரர்கள் அடித்து, சித்ரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து புதைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் நடந்த இத்துயரின் வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளன. 

பல கிராமத்தையும் இராணுவத்தினர் சூறையாடியுள்ள நிலையில், 17 வயது முதல் 18 வயது வரை உள்ள இராணுவ அதிகாரிகள், கிராமத்திற்குள் புகுந்து 40 வயது ஆகும் ஆண்களை கைது செய்து சித்ரவதை செய்து கொலை செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.