மியான்மரில் அதிபயங்கர நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்.!



Myanmar Earthquake Today

 

பர்மாவில் இன்று அதிகாலை 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

உலகம் முழுவதும் நிலநடுக்கம் என்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்தே காணப்படுகிறது. இந்தோனேசியா, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வழக்கத்திற்கு மாறான நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.

சமீபத்தில் இந்தோனேஷிய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளை கடந்து இருந்தது. இந்த நிலையில், மியான்மர் நாட்டில் அதிகாலை 03:52 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில் (பர்மா) வடமேற்கு திசையில் 162 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அம்மாநில தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகள் & கட்டிடங்கள் குலுக்கத்தால் பதறியபடி திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர்.