#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹவாய் அருகே அதிர்ச்சி.! 9 வீரர்களுடன் கடலில் பாய்ந்த ராணுவ விமானம்.! நடந்தது என்ன??
அமெரிக்கா ஹவாய் மாநிலம், ஓஹு தீவின் கெனோஹே கடற்கரை பகுதியில் ராணுவ படைப்பு சொந்தமான விமான தளம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒன்பது ராணுவ வீரர்களுடன் போயிங் போஸிடான் 8-ஏ ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.
அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை தாண்டி வேகமாகச் சென்று கடல்நீரில் இறங்கியது. தகவலறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் 9 வீரர்களும் கடலில் நீந்தி பாதுகாப்பாக கரைக்கு திரும்பினர். அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மழை மற்றும் மேகங்கள் சூழ்ந்து கடும் பனிமூட்டமாக இருந்ததால் விமானிக்கு ஓடுபாதை சரியாக தெரியவில்லை எனவும், அதனால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.