பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! 13 வயது மகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர்
அமெரிக்காவின் முன்னாள் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரரான கோபே பிரையன்ட் மற்றும் அவரது 13 வயது மகள் கியானா ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
41 வயதான கோபே பிரையன்ட் லாஸ் ஏஞ்செல்ஸ் கூடைப்பந்து அணிக்காக 20 ஆண்டுகள் ஆடியவர். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒரே அணிக்காக ஆடி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ஓய்வு பெற்ற பிரையன்ட் தனது மகளான கியானாவை கூடைப்பந்து வீராங்கனையாக பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஞாற்றுக்கிழமை காலை பிரையன்ட் தனது மகள் கியானா மற்றும் மேலும் 3 பேருடன் தனது சொந்த ஹெலிகாப்டரில் காலிஃபோர்னியாவில் உள்ள ஜான் வானே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் புறப்பட்ட 40 நிமிடத்தில் களபாஸஸ் மலைப்பகுதியில் பறந்து சென்றபோது திடீரென விபத்துக்களானது. இந்த கோரா விபத்தில் ஹெலிகாப்டர் எரிந்து விழுந்தது. அதில் பயணம் செய்த பிரையன்ட், அவரது மகளை கியானா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களுடன் பயணம் செய்த மற்றவர்களும் உயிரிழந்த்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.