#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆப்கானிஸ்தான், நேபாள நாடுகளில் நள்ளிரவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; மக்கள் அச்சம்.!
நேற்று முன்தினம் நேபாளத்தில் உள்ள மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, தற்போது வரை 160க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மருத்துவமனைகளில் 150 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரிக்டர் அளவில் 6.4 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலவியல் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளத்தில் மீண்டும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் இருந்து, 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியா - கஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 4.5 புள்ளிகள் என்ற அலகில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கஜிகிஸ்தான் நாட்டினை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 01:25 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, நேபாளத்தில் உள் காட்மண்டு நகரில் இருந்து 169 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் மையம் கொண்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.