மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் புதியவகை கொரோனா.! வெளியான அதிர்ச்சி தகவல்.!
இங்கிலாந்து நாட்டில் பரவிவரும் புதியவகை கொரோனா வைரஸால் அனைத்து நாடுகளும் உஷார் நிலையில் உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போதுவரை குறையாதநிலையில், கொரோனா வைரஸின் மரபணுவில் பெரியளவில் மாற்றம்பெற்று புதுவகை கொரோனா வைரஸாக உருமாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் இந்த புதுவகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் வீரியம் அதிகமாக இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முன்னதாக தெரிவித்து இருந்தார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் இத்தாலி, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது.
பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவியிடம் புதுவகை கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு உருமாறிய கொரோனா B-117 இல்லை என்பது கண்டறியப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.