புதிதாக கண்டறியப்பட்ட ‘நியோகோவ்’ வைரஸ்.! கடும் அச்சத்தில் உலக நாடுகள்.!



new virus in south africa

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் வருடம் பரவிய கொரோனா வைரஸ், தற்போது வரை பல்வேறு மாறுபாடுகளை அடைந்து, நாட்டிற்கு ஒரு வீரியத்துடன் பரவி வருகிறது. தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ‘‘நியோகோவ்’’ என்ற பெயரிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். 

இது சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும். இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்த புதிய வைரஸ், மனிதர்களிடையே தீவிரமாக பரவும் தன்மை கொண்டதல்ல என்பதால் இந்த வைரசைப்பற்றி பயப்படத்தேவையில்லை என்று நம்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.