திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கார் - பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 20 பேர் உடல் கருகி துள்ளத்துடிக்க பலி..!
சாலையில் பேருந்து - கார் மோதி விபத்திற்குள்ளானதில், இரண்டு வாகனமும் தீப்பிடித்து எரிந்து 20 பேர் பலியாகினர்.
மேற்கு ஆப்ரிக்க நாட்டில் உள்ள நைஜிரியாவில் சாலைபோக்குவரத்து மிகவும் கடினமானதாகும். அங்குள்ள வளர்ச்சியின்மை மற்றும் ஊழல், பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சனை போன்ற காரணத்தால் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் பல்வேறு சிக்கல் நிலவுகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் தென்கிழக்கில் இருக்கும் ஒயோ மாகாணத்தின் இரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தும் - காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் பேருந்தும் - காரும் தீப்பிடித்து எரியவே, பேருந்துக்குள் சிக்கிய 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.