காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சமூக தலைவரின் மனைவி, மகள்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டும் பயங்கரவாத குழு.!
ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரிய நாட்டில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு படைகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும், கிராமங்களுக்குள் புகுந்து மக்களை கொலை செய்தல், பள்ளி மாணவ - மாணவியர்களை கடத்தி பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து பணம் கேட்டு மிரட்டுதல், அவர்களை தற்கொலைப்படையாக மாற்றி கொலை செய்தல் என பல துயரங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் உள்ள அபுஜா - கடுனா தேசிய நெடுஞ்சாலையில் குடும்பத்துடன் வசித்து வரும் கடுனா சமூக தலைவர் மால்ம் இப்ராஹிம் டாங்கோ. இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இவரின் இல்லத்திற்கு கடந்த புதன்கிழமை சென்ற பயங்கரவாத குழு, டாங்கோவின் 2 மனைவிகள் மற்றும் 4 குழந்தைகளை கடத்தி சென்றுள்ளனர்.
அவர்களை மறைமுக இடத்தில், தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பயங்கரவாத குழு 500 மில்லியன் டாலர் பணம் கேட்டு மிரட்டி வருகிறது. மேலும், பணத்தை கொடுக்காத பட்சத்தில் குடும்பத்தினரை கொலை செய்திடுவோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டாங்கோவின் ஒரு மனைவி உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாமல் அவரை மட்டும் விடுத்துள்ளனர்.
முன்னதாக, கடந்த புதன்கிழமையின் போது டாங்கோவின் உதவியாளரை கடத்திய பயங்கரவாதிகள், மீட்க பணம் கேட்டுள்ளனர். டாங்கோ தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில், அவர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இப்படியான நிலையில், அவரின் மனைவி மற்றும் மகள்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில், எனது வங்கிக்கணக்கு விபரங்களை பயங்கரவாதிகளுக்கு எடுத்து சென்று காண்பிக்க வேண்டும் என்று டாங்கோ தெரிவித்துள்ளார்.