லிபிய பிரதமர் கொலை முயற்சி.. காரில் சரமாரி துப்பாக்கிசூடு.. உலக அரசியலில் பேரதிர்ச்சி.!



North Africa Libya Country Prime Minister Murder Attempt by Gun Fire

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள லிபியா நாட்டின் பிரதமராக இருப்பவர் அப்துல் ஹமீத் அல் திபைபா (வயது 62). இவர் நேற்று லிபிய தலைநகர் திரிபோலி நகரில் காரில் சென்று கொண்டு இருந்தார். 

அப்போது, அவர் வரும் வழியில் தயாராக இருந்த மர்ம நபர்கள், அதிபரின் காரில் சரமாரி துப்பாக்கிசூடு நடத்தினர். அதிபர் தனது பாதுகாப்பு வாகனத்தில் பயணம் செய்ததால், எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். 

North Africa

இதனையடுத்து, தாக்குதலை அரங்கேற்றிய கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுவிடவே, அவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும், இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது எனவும் விசாரணை நடந்து வருகிறது. 

ஏற்கனவே லிபியாவில் உள்நாட்டுப்போரின் காரணமாக அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், பிரதமரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.