ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மார்க் வேண்டுமா?.. "படுக்கையை பகிர்ந்துகொள்" - மாணவிகள் அதிர்ச்சி புகார்.!
வணிகவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர், மாணவிகளிடம் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் என்னுடன் வந்து படுக்கையை பகிர வேண்டும் என்று கூறி பாலியல் தொல்லை அளித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில், யஜ்டா நகரம் உள்ளது. இந்த நகரில் செயல்பட்டு வரும் வணிகவியல் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவரின் மீது அதிர்ச்சி பாலியல் குற்றசாட்டுகளை மாணவிகள் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளிடம் "நீங்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்றால், என்னுடன் தனிமையில் படுக்கையை பகிர வேண்டும்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கவே, விஷயம் உள்ளூர் ஊடகத்தில் வெளியாகி நாட்டிலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய ஆசிரியரை அந்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் கல்வி அமைச்சக அதிகாரி உறுதி செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் இயக்குனரும் பணியை விட்டு செல்ல அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணையும் நடந்து வருகிறது. மொராக்கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பல வருடமாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றசாட்டுகள் அதிகரித்ததாக தெரியவரும் நிலையில், அவை தற்போது சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.