மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கியாஸ் கசிந்து வெடித்து சிதறிய ஹோட்டல்.. 8 பேர் பரிதாப பலி., 30 பேர் படுகாயம்.!
வட அமெரிக்காவில் உள்ள கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடேகா பகுதியில் ஹோட்டல் செயல்படுகிறது. இந்த ஹோட்டலில் நேற்று வழக்கம்போல பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
உணவருந்தும் நபர்களும் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நிலையில், திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஹோட்டலின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 8 பேர் பலியான நிலையில், 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் சமையல் கியாஸ் கசிந்து வெடித்து சிதறி விபத்து நடந்தது தெரியவந்தது.