பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆட்டத்தை தொடங்கிய வடகொரியா?.. ஏவுகணை சோதனை அம்பலம்..! உலக நாடுகளுக்கு அதிர்ச்சி.!!
வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில், அந்நாட்டின் இராணுவம் தனது பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், வடகொரியா அதிபர் கிம் ஜான் உன் புத்தாண்டன்று உரையாடுகையில், இராணுவத்தின் வலிமையை மேலும் வலுப்படுத்த உத்தரவிட்டு இருந்ததாகவும் தெரியவருகிறது.
வடகொரியா தனது ஏவுகணையை சோதனை செய்த தகவலை ஜப்பான் மற்றும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் உறுதி செய்து நாட்டின் தலைமைக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிபர்களும் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.
பாலிஸ்டிக் ஏவுகணை என்பது ஐக்கிய நாடுகள் சபையினால் தடை விதிக்கப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றாகும். தடை விதிக்கப்பட்ட ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.