கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
வடகொரியா நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு..! கடும் பரபரப்பில் வடகொரியா..! அவசரநிலை பிரகடனப்படுத்திய அதிபர் கிம் ஜாங் உன்..!
வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட எங்கள் நாட்டில் இல்லை என வடகொரியா கூறிவந்தது.
சீனாவின் அருகே இருக்கும் வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என கூறுவது நம்பும்படி இல்லை என உலகநாடுகள் கூறிவந்தன. இந்நிலையில் தென்கொரியாவிலிருந்து சட்டவிரேதமாக வடகொரியாவிற்குள் நுழைந்த நபரால் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து வடகொரியா எல்லைகளில் உள்ள மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தி அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பரவாமால் தடுக்க அதிகாரிகளுடன் அதிபர் கிம் ஜாங் உன் அவசர ஆலேசானை நடத்தி உள்ளார்.