மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 டிவோர்ஸ்.. 3 ஆவதாக மனைவியான 18 வயது இளம்பெண்..! 49 வயது அரசியல் புள்ளியின் செயலால், 90 கிட்ஸ் வேதனை.!
ஏற்கனவே 2 மனைவிகளை விவாகரத்து செய்த அரசியல் பிரபலம், மூன்றாவதாக 18 வயது இளம்பெண்ணை கரம்பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் அமீர் லியாகத் (வயது 49). இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமையில் 2 ஆவது மனைவியையும் விவாகரத்து செய்வதாக அமீர் அறிவித்து இருந்தார்.
அதனைத்தொடர்ந்து, அன்றைய நாளிலேயே லியாகத் 18 வயதாகும் இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த தகவல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னைவிட 31 வயது குறைவான இளம் பெண்ணை அவருக்கு மூன்றாவது மனைவியாக அமீர் லியாகத் தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், "எங்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது. எங்களின் நலன் விரும்பிகள், எங்களின் சிறந்த வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பல இருண்ட சுரங்கப்பாதையை கடந்து வந்துள்ளேன். அந்த சுரங்கப்பாதை எனது தவறான திருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
அமீர் லியாகத்தை திருமணம் செய்த 18 வயது இளம்பெண்ணான சியாடா டேனியா ஷா தெரிவிக்கையில், "சிறுவயதில் இருந்து எனக்கு அமீர் லியாகத்தை பிடிக்கும். அவர் தொலைக்காட்சியில் வரும் படங்களையே எனது பெற்றோர் சிறுவயதில் காண்பிப்பார்கள். நான் அழும்போது, அவர் நடித்த தொடரையே எனக்கு பெற்றோர்கள் பார்க்க வைத்தனர். இன்று அவரையே கரம்பிடித்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.