திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் ஆணவப்படுகொலை.! குடும்பமே சேர்ந்து நடத்திய பயங்கரம்.!!
பாகிஸ்தானில் பிறந்து பின்னாளில் இத்தாலியில் குடியேறிய பெண்மணி சமன் அப்பாஸ் (வயது 18). இவர் இத்தாலிக்கு சென்ற பின்னர், தனது வாழ்க்கை முறையை அந்நாட்டுக்கேற்ப மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். அதே நாட்டைச் சேரந்த ஒரு இளைஞரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பெண்மணியின் இயல்பான வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள மனமில்லாத அவரின் பெற்றோர், பாகிஸ்தானைச் சேர்ந்த தங்களது உறவினர் மகனுக்கு அவரை திருமணம் செய்ய முடிவெடுத்து பாகிஸ்தான் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் பெண்மணி தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
இதனால் பெற்றோர் கடந்த நவம்பர் 2021-ஆம் ஆண்டு தங்களின் மகளை இத்தாலியில் வைத்து கொலை செய்து அங்கிருந்து பாகிஸ்தான் தப்பிச் சென்றனர். பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆணவ கொலை நடந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற அனைவரையும் இத்தாலிக்கு நாடுகடத்தி விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்த பெண்ணின் தாய், தந்தையான சப்பார் அப்பாஸ், நாஜியா காஜின் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பெண்ணின் மாமாவான டேனிஸ் ஹுசைன் 14 ஆண்டுகளுக்கான சிறை தண்டனையை பெற்றார்.