திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடியோ: மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி..! வெனிசுலா நாட்டில் நடந்த அதிசயம்.! வைரலாகும் வீடியோ.
உலகின் ஏதாவது ஒரு இடத்தில் வித்தியாசமான சம்பவங்கள் தினம் தினம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு, உலகில் எந்த ஒரு இடத்தில் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அது சமூக வலைத்தளங்கள் மூலம் உலகளவில் ட்ரெண்டாகிவிடுகிறது.
இரண்டு தலைகொண்ட ஆட்டுக்குட்டி, புறா முகம் கொண்ட மீன், மனித உருவத்துடன் பிறந்த கன்றுக்குட்டி இப்படி ஏதாவது ஒரு சம்பவம் அவ்வப்போது வைரலாவது உண்டு. அந்த வகையில், வெனிசுலா நாட்டில், பன்றிக்குட்டி ஓன்று மனித முகம் கொண்ட தோற்றத்துடன் பிறந்திருப்பது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின், கரோரா பகுதியில் பிறந்த இந்த பன்றிக் குட்டிக்கு மனிதர்களை போல கண்களும், முடியும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இந்த தகவல் வைரலானதை அடுத்து அந்த பகுதியில் இருக்கும் மக்கள் அந்த பன்றி குட்டியை வந்து வந்து பார்த்து செல்கின்றனர்.