96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மாயமான விமானம் மலையில் மோதி விபத்து..! பயணிகளை தேடும் பணியில் இராணுவம்..!
நேபாளத்தில் மாயமான விமானம் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
நேபாளத்தில் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காத்மண்டு, நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து நேற்று காலை தாரா ஏர் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் கானாமல போனது.விமானத்தில் மொத்தம் 22 பேர் பயனித்தனர்.
விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். விமானம் மாயமானதையடுத்து, அதை தேடும் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல் போன் சிக்னல் உள்ளிட்டவற்றை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா? விமானத்தின் நிலை என்ன? என்பது பற்றி மலைப்பகுதியில் நேபாள ராணுவத்தினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கானாமல் போன விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடப்பதை நேபாள ராணுவம் இன்று கண்டுபிடித்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினர் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன? யாராவது உயிருடன் இருக்கிரார்களா? என்பது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.