மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேடையில் பாடிக்கொண்டிருந்த அழகிய பாடகிக்கு மேடையிலையே நடந்த சோகம்! வீடியோ.
ஸ்பெய்ன் நாட்டில் மாட்ரிட் என்னும் நகரில் நடந்த மிக பிரமாண்ட ஆர்கெஸ்ட்ரா ஒன்றில் மேடையில் பாடிக்கொண்டிருந்த பெண் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Joana Sainz என்ற அந்த பாடகி பாடிக்கொண்டிருக்கையில் மேடையில் வைக்கப்பட்டிருந்த fireworks canister திடீரென வெடித்துள்ளது. இதில் ஒரு பாகம் அந்த பாடகியின் வயிற்றில் படத்தில் அந்த பாடகி மேடையிலையே சரிந்து விழுந்துள்ளார். உடனே மேடையை திரையால் மூடிய நிகழ்ச்சி குழு அந்த பாடகியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அந்த பாடகியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில் fireworks canister வெடித்ததில் ஒரு பாகம் வலதுபுறமாக சென்றுவிட்டது என்றும், மற்றொரு பாகம் பாடகியின் வயிற்றை பலமாக தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
இந்த விபத்து வீடியோவாக பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.