நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் பலி..!



Powerful earthquake in Nepal.. More than 130 people were trapped in the rubble of buildings..!

நேபாளத்தில் நேற்று இரவு சரியாக 11:30 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ஜாஜர்கோர்ட் மாகாணத்தின் லாமிடாண்டா பகுதியில் மையம் கொண்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஜார்ஜர்கோர்ட் மாகாணத்தின் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானதாகவும், இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Nepal

இதனையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.