மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்ப்பிணிகளே உஷார்..! கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா என்னும் பெரும் தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திற்கும் கொரோனா தொற்று உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு கர்ப்பிணிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் அந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தன.
இதனையடுத்து அந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்ற ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவில் தாயையும் சேயையும் இணைக்கும் தொப்புள் கொடி மூலம் தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த குழந்தையின் உடல்களை உடற்கூறாய்வு செய்ததில் குழந்தைகளின் மூளையில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே கர்ப்பிணி பெண்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு காலத்தில் மிக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.