மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும் கொரோனா பரிசோதனை..! ஆய்வு முடிவுகள் வந்துவிட்டது.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவின் கோர பிடியில் சிக்கி அணைத்து நாடுகளும் தவித்துவருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனோவால் இதுவரை 53,241 பேர் உயிர் இழந்துள்ளனனர். மேலும், இங்கிலாந்து இளவரசர், பிரதமர் என பல்வேறு முக்கிய தலைவர்களையும், பிரபலங்களையும் கூட கொரோனா தாக்கி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிபர் டிரம்புக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது.
இரண்டு முறை நடத்தப்பட்டுள்ள ஆய்வில், இருமுறையும் பாதிப்பு இல்லை என வந்ததாக வெள்ளிமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிபர் நலமுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.