பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உலக ஆக்ஷன் நாயகன் ஜாக்கி ஜானுக்கு கொரோனா வைரஸா? வெளியான அதிர்ச்சி தகவல்! வருத்தத்தில் ரசிகர்கள்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 2700க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.
இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த ஆக்ஷன் நாயகனான ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினர். இந்த செய்து வைரலான நிலையில் இந்த வைரஸால் துன்பப்படுபவர்களுக்கு 100 மில்லியன் டாலர் அளித்தார். ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சியான செய்தி வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஜாக்கி ஜானே தனது சமூகவலைத்தள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் உங்களது அக்கறைக்கு நன்றி. நான் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் மிகவும் நலமாகத்தான் உள்ளேன். யாரும் வருத்தப்படவேண்டாம் என கூறியுள்ளார்.