மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா தடுப்பூசி கண்டறிந்த ரஷிய அறிவியல் விஞ்ஞானி மர்ம மரணம்... வீட்டில் சடலமாக மீட்பு...! ரஷியாவில் பேரதிர்ச்சி.!!
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டறிந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம் அடைந்தார்.
ரஷியா கொரோனா வைரஸை தடுக்க ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியை உலகளவில் அறிமுகம் செய்தது. இதனை 18 ரஷிய அறிவியல் விஞ்ஞானிகள் குழு கடந்த 2020ம் ஆண்டு கண்டறிந்தது.
இந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆண்ட்ரி போட்டிக்கோவ் (வயது 47). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
அவரின் கழுத்து பெல்டால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது போல இருந்தது. இதனால் காவல் துறையினர் விஞ்ஞானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக 29 வயது நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த அறிவியல் விஞ்ஞானி ஆன்ட்ரிக்கு கடந்த 2021ல் ரஷிய அதிபர் அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.