மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடுப்பூசிக்கு பதில் உப்புக்கரைசலை செலுத்திய மருத்துவர்.. நாடு முழுவதும் பரபரப்பு.!
சிங்கப்பூரில் மருத்துவர் ஒருவர் கொரோனா தடுப்பூசிக்கு பதில் ஊசி வழியே உப்பு கரைசல் திரவத்தை ஒருவருக்கு செலுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் 33 வயது குவா என்ற மருத்துவர் போலியாக நோயாளிகள் பெயரில் கணக்கு துவங்கி, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் தடுப்பூசிக்கு எதிரான குழுவில் உறுப்பினராக இருக்கிறார். எனவே, தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை தேசிய நோய்த்தடுப்பு பதிவேட்டில் பதிவேற்றியுள்ளார்.இதனை தொடர்ந்து இந்த குற்றம் கண்டறியப்பட்ட நிலையில், அவர் 18 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் தகவல்களை வெளியிட்டுள்ளது. இவர் தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் தன்னிடம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வரும் நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பதில் உப்புக்கரைசல் நிறைந்த திரவத்தை ஊசி வழியே செலுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 கிளினிக்குகள் இழுத்து மூடப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த சம்பவம் சிங்கப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.