மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Earthquake Alerts: சிங்கப்பூர், பிலிப்பைன்ஸில் அதிபயங்கர நிலநடுக்கம்.. மக்கள் பீதி.!
பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளை தாண்டி பதிவாகியுள்ளது.
உலகளவில் நிலநடுக்கத்தால் அதிகளவு பாதிக்கப்படும் நாடுகளாக ஜப்பான், இந்தோனேஷியா, அமெரிக்கா ஆகியவை இருக்கின்றன. எரிமலை வெடிப்பு மற்றும் டெக்டானிக் தட்டுகளின் மோதல் காரணமாக நிலநடுக்கம் ஏற்பட்டு, அதனைத்தொடர்ந்து சுனாமி போன்றவையும் நிகழ்கிறது.
இந்நிலையில், இன்று காலை இந்திய நேரப்படி 02:39 மணியளவில் மலேஷியாவில் குலாலம்பூர் நகரில் இருந்து தென்மேற்கு திசையில் 504 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
அதனைப்போல, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகரில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 157 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.