#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கனடாவில் உள்ள ராமர் கோவிலில் இந்தியாவிற்கு எதிராக வாசகம்; இந்திய தூதரகம் கண்டனம்...!
இந்து கோயில்கள் தொடர்ந்து கனடாவில் தாக்கப்பட்டு வருகின்றன. கனடாவில் உள்ள மிசிசாகாவில் இருக்கும் ராமர் கோயிலின் சுவர்களில், இந்தியாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதில், இந்திய பிரதமர் மோடியை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு டொராண்டோவில் இருக்கும் இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோயில் சுவரில் இந்திய பிரதமர் மோடி குறித்து எழுதியவர்கள் மீது கனடா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் கூறுகையில், இந்த சம்பவம் ஓரு வெறுப்பு தாக்குதலாகும். இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்