திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
25 புல்லட் ரயில்களின் சேவையை நிறுத்திய நத்தை! வெளியான அதிர்ச்சி காரணம்!
நேரம் தவறாமை என்பதற்கு உதாரணமா ஜப்பான் புல்லட் ரயில்கள் செயல்பட்டு வருகின்றனர். நிலநடுக்கம், இயற்கை சீற்றம் ஆகிய காலங்களில் கூட புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டது இல்லை. இந்நிலையில் ஒரு நத்தையால் கிட்டத்தட்ட 25 புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
புல்லட் ரயில்கள் செல்வதற்கு தேவையான மின்சாரம் தடைபட்ட நிலையில் அதற்கான பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ரயில் பாதைக்கு தொடர்புடைய எலக்ட்ரானிக் கருவியில் இருந்து நத்தை ஒன்றை உயிரிழந்த நிலையில் அவர்கள் மீட்டனர்.
குறிப்பிட்ட எலக்ட்ரானிக் கருவியை கடக்கும்போது நத்தை மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்றும், இதனாலயே புல்லட் ரயில்களுக்கு மின்சாரம் செல்லவில்லை எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.