உலகமே ஓமிக்ரானுக்கு அச்சப்பட, முழு ஊரடங்கை இரத்து செய்த தென்னாபிரிக்கா.!



South Africa President Withdrawn Lockdown Rules

கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ள நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக உள்ள நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்னர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒவ்வொரு அலையையும் ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்து வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி ஒமிக்ரான் வகை கொரோனா முதன் முதலாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அந்த வைரஸ் உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவை பொறுத்த வரையில் ஒமிக்ரான் வகை உச்சமடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 16 ஆம் தேதி ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு பாதிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 21 ஆம் தேதி 15 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்ட ஒமிக்ரான், படிப்படியாக குறைந்து வருகிறது. 

South Africa

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் 2 வருடத்திற்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நேற்று முன்தினத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 15 நாட்களுக்குள் பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.