மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வரலாற்றில் இல்லாத பெரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு.. 400 பேர் பரிதாப பலி.!
ஆப்பிரிக்க வரலாற்றில் இல்லாத கனமழையால் தென்னாபிரிக்க நாடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 400 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 4 நாட்கள் தொடர் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலோர மாகாணமாக கருதப்படும் குவாசுலு முற்றிலும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு மழை மற்றும் வெள்ளத்திற்கு என மொத்தமாக 400 பேர் பலியாகியுள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகமானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால், முக்கிய நகரத்தின் உட்கட்டமைப்பு சேதங்களை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சரி செய்து வருகின்றனர். இந்த வெள்ள பாதிப்பினை தேசிய பேரழிவாக அந்நாட்டின் அதிபர் சிரில் ராமபோசா அறிவித்து இருக்கிறார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.