மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசுக்கு எதிராக போராட்டம்.. இலங்கையில் வன்முறை.. ஊரடங்கு உத்தரவுகள் அதிரடி அமல்.!
கொழும்பு நகரில் அதிபருக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையானதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின்சார விநியோகம் பாதிப்பு, பணவீக்கம், அந்நிய செலாவணி பிரச்சனை, அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
இலங்கையின் தலைநகராக கருதப்படும் கொழும்பில், நாளொன்றுக்கு 13 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை நேற்று முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்தின் போது சிலர் இராணுவ வாகனங்களுக்கு தீ வைக்கவே, போராட்டம் வன்முறையாக மாறியது. இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தினை கலைத்தனர்.
வன்முறையால் கொழும்பு நகரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசின் சார்பில் மறுஅறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.