ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பல்லை துலக்கி, ப்ரஸ்ஸை விழுங்கிய பெண்மணி.. அவசரத்துல இப்படியுமா பண்ணுவீங்க?..! மருத்துவர்கள் நெகிழ்ச்சி செயல்.!!
வேலைக்கு புறப்பட்டு செல்லும் அவசரத்தில் பற்களை துலக்கிய பெண்மணி, பல்துலக்கியை விழுங்கி அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தைவான் நாட்டினை சேர்ந்த 45 வயது பெண்மணி, தினமும் வேலைக்கு அவசர கதியில் எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வர தாமதம் ஆகும் என்பதால், மறுநாள் காலையில் நேரமாக எழுந்துகொள்ள இயலாமல் அவசர கதியில் புறப்பட்டு செல்வதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பெண்மணி காலையில் எழுந்து அவசர அவசரமாக வேலைக்கு தயாராகிக்கொண்டு இருந்த நிலையில், பல் துலக்கும்போதும் எதிர்பாராத விதமாக பல்துலக்கியை விழுங்கி இருக்கிறார். அதனை வெளியே எடுக்கிறேன் என்ற பெயரில் அவர் எடுத்த முயற்சி தோல்வியுற்று, பல்துலக்கி தொண்டைக்குள் சென்று சிக்கியுள்ளது.
இதனையடுத்து, அங்குள்ள மருத்துவமனைக்கு சென்ற பெண்மணி விஷயத்தை கூறவே, மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். பல்துலக்கி பிளாஸ்டிக்கால் செய்த பொருள் என்பதால் அது தென்படவில்லை. இதனால் 7 மணிநேர போராட்டத்திற்கு பின்னர், Polypectomy Ring எனப்படும் நீண்ட கருவியை வைத்து பல்துலக்கியை வெளியே எடுத்துள்ளனர்.
பல் துலக்கியால் பெண்ணின் தொண்டையில் சிராய்ப்பு ஏற்பட்டு, இரத்தம் வந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதிஷ்டவசமாக அவருக்கு எந்த பிரச்சனையும் பெரியளவில் ஏற்படவில்லை. பொதுவாக குழந்தைகள் கோலிக்குண்டு மற்றும் காசு போன்றவற்றை விழுங்கும். இதுபோன்ற சம்பவம் அபூர்வம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.