என்னடா சொல்றீங்க..! 2 மணிநேரம் ஆன்லைன் க்ளாஸ் எடுத்த ஆசிரியர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..



Teacher mute mike two hours in online class

இரண்டுமணிநேரம் ஆன்லைன் வகுப்பு எடுத்த கணித ஆசிரியருக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா பெருந்த்தொற்றினால் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கி பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகள் ஆன்லைன் மூலம்தான் நடந்துவருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் டாங் வாங் (Dong Wan) என்பவர் தனது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் சுமார் இரண்டுமணிநேரம் வகுப்பு எடுத்துள்ளார்.

சுமார் 6 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணிவரை என வகுப்பு இரண்டுமணிநேரம் நீண்டுள்ளது. இறுதியாக பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு கடைசியாக மாணவர்களை பார்த்து யாருக்கும் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என aஆசிரியர் கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. சரி, இத்தோடு வகுப்பை முடித்துக்கொள்ளலாமா என ஆசிரியர் கேட்டுள்ளார் அப்போதும் மாணவர்கள் யாரும் அவருக்கு பதிலளிக்கவில்லை.

இதனால் கடுப்பான ஆசிரியர் என்னடா நடக்குது என பார்த்தபோது, வகுப்பு தொடங்கிய சில நிமிடங்களிலையே ஆசிரியர் தனது மைக்கை மியூட்டில் போட்டுவிட்டு பாடம் எடுத்துள்ளார். இதனால் அவர் நடத்திய பாடம் மாணவர்கள் யாருக்குமே கேட்கவில்லை. உடனே மியூட்டை எடுத்துவிட்டு மாணவர்களிடம் அவர் பேசியபோது, 6 மணிக்கு தொடங்கிய வகுப்பு 6.08 வரை மட்டுமே தங்களுக்கு கேட்டதாகவும், அதன்பிறகு தங்களுக்கு எதுவுமே கேட்கவில்லை எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதனை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார் ஆசிரியர். பின்னர் வேறு வழியில்லாமல், இந்த வகுப்பை மற்றொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என மாணவர்களிடம் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள மாணவர்களில் ஒருவர், ஆசிரியர் தவறுதலாக மைக்கை மியூட்டில் போட்டுவிட்டார். அவரை தொடர்புகொண்டு விவரத்தை தெரிவிக்க தாங்கள் பலமுறை முயற்சி செய்ததாகவும், பலமுறை அவருக்கு போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பில் நடைபெறும் நகைச்சுவை அல்லது தவறுகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகிவரும் நிலையில், தற்போது இந்த சம்பவமும் உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.