அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
தென்கொரியாவில் பயங்கரம்.. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து.. பலி எண்ணிக்கை 5 உயர்வு..!
தென்கொரியாவில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்கொரியாவின் தலைநகர் சீயோனுக்கு அருகில் உள்ள கியோங்கின் விரைவு சாலையில் பேருந்தும் டிரக்கும் ஒன்றுக்கொன்று மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் தீயில் கருகி உள்ளன.
இதனையடுத்து இந்த பயங்கர விபத்தில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.