மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிரியாவில் பயங்கரம்.. தரைமட்டமான 5 மாடி குடியிருப்பு கட்டடம்.. பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு..!
சிரியாவில் அலெப்போ பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் ஷேக் மக்சூத் மாவட்டத்திலுள்ள ஒரு குடியிருப்பு கட்டிடமானது திடீரென்று நேற்று இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்பு குழுவினர் ஈடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இந்நிலையில் பலர் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கிருக்கலாம் என்று கருதப்படுவதால் மீட்பு பணியானது தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த குடியிருப்பு கட்டிடத்திற்கு அடியில் ஏற்பட்ட நீர்க்கசுவின் காரணமாக கட்டிடம் பலவீனமாகி தரைமட்டமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.