மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
30 வருட நெருக்கம்.. கடைசி நொடிப்பொழுதில் கூட பிரிக்க முடியலையே.. மனதை உருக்கும் துயர சம்பவம்.!
டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் பால் ப்ளேக்வெல் - ரோஸ்மேரி ப்ளேக்வெல் தம்பதியினர். இவர்கள் இருவரும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 30 வருடங்களாக இணைப்பிரியாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் பால் மற்றும் ரோஸ்மேரி இருவரையும் அவரது மகன்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.
அதன்பின் மருத்துவர்கள் பால் மற்றும் ரோஸ்மேரி இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் அதிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லாததை அடுத்து மருத்துவர்கள் பால் மற்றும் ரோஸ்மேரி தம்பதியினரின் மகன்களிடம் உங்கள் பெற்றோர் பிழைப்பது கடினம் என கூறியுள்ளனர்.
அதன்பின் மகன்கள் இருவரும் மனதை கல்லாக்கிக் கொண்டு 30 வருடங்களாக இணைந்து வாழ்ந்த தங்களது பெற்றோர் இறப்பிலும் இணைந்தே செல்லட்டும் என்ற எண்ணத்தில் கடினமான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
அதன்படி, எனது பெற்றோர்கள் ஒன்றாக கையை பிடித்தபடி இருந்தார்கள். அதனுடன் நானும் எனது சகோதரரும், பெற்றோர்களின் கைகளை இணைத்துக் கொண்டோம். அச்சமயத்தில் வென்டிலேட்டர் இணைப்பில் இருந்து இருவரும் துண்டிக்கப்பட்டனர் என பால் - ரோஸ்மேரி தம்பதியின் மகன் ஷான் ப்ளேக்வெல் தெரிவித்துள்ளார்.