மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிவிங் டுகெதர் காதலியை திருமணம் செய்த அன்றே கொடூரம்: மணப்பெண் உட்பட நால்வர் சுட்டுக்கொலை.. முன்னாள் இராணுவ வீரர் வெறிச்செயல்.!
தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக் பகுதியை சேர்ந்தவர் Chaturong Suksuk (வயது 29). இவர் இராணுவத்தில் பணியாற்றி, கால்களில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வுபெற்றவர் ஆவார். மேலும், பாரா நீச்சல் தேர்ச்சியாளரான இவர், தாய்லாந்து அளவிலான போட்டியில் வெற்றிபெறும் இருக்கிறார்.
அங்குள்ள Wang Nam Khieo மாவட்டத்தை சேர்ந்தவர் Kanchana Pachunthuek (வயது 44). சுக்சுக் - காஞ்சனா கடந்த 3 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தாக தெரியவருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு Wang Nam Khieo மாவட்டத்தில் திருமணம் நடைபெற்று முடித்துள்ளது.
இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதிகள் மணமேடையில் இருந்தபோது, தனது காருக்கு சென்ற சுக்சுக், சற்றும் எதிர்பாராத விதமாக 9mm கைத்துப்பாக்கியை எடுத்து வந்து மனைவி காஞ்சனா, அவரின் தாய் கிந்தாங் (வயது 62), சகோதரி மனடோ (வயது 33), இரண்டு உறவினர்கள் என 4 பேரை சுட்டுக்கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சுக்சுக் லிவிங் டுகெதர் வாழ்க்கையை கைவிடும் எண்ணத்தில் இருந்திருக்கலாம்.
பெண்ணின் தரப்பு வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து, இறுதியில் அவர்களையும் சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை செய்து உயிரை விட்டிருக்கலாம் அல்லது இருவருக்குள்ளும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால், கருத்து வேறுபாடு நிலவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
A man shoots himself, his wife, and two family members on his wedding day. This sad incident happened in Thailand pic.twitter.com/7QfWCXpHEV
— David Chan (@udtseals1411) November 28, 2023