அடக்கடவுளே.. தூங்கவிடாமல் குறைத்த நாயை உயிருடன் குழிதோண்டி புதைத்த மூதாட்டி..! பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!
சமீபத்தில் தென்கொரியா நாட்டில் முதியவர் ஒருவர் 1000 நாய்களை பட்டினிபோட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இதேபோன்று மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரேசில் நாட்டில் தூங்கவிடாமல் குறைத்துக்கொண்டே இருந்ததால் பக்கத்து வீட்டு நாயை 82 வயது மூதாட்டி ஒருவர் உயிருடன் குழிதோண்டி புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உரிமையாளர் மூதாட்டியிடம் விசாரித்த போது அவர் உண்மையை கூறியுள்ளார். இதனால் உடனடியாக புதைத்த இடத்தில் சென்று நாயை உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூதாட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.