உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை குணமடைந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?



The number of cured after corono attack

இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் ஒற்றை வார்த்தை கொரோனா. உலகின் மொத்த செயல்பாடுகளையும் முடக்கும் அளவிற்கு அனைவரையும் அச்சப்பட வைத்துள்ளது கொரோனா வைரஸ்.

கடந்த டிசம்பர், 2019 முதல் சீனாவில் துவங்கி உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸினை உலகளாவிய கொள்ளை நோயாக உலக சுகாதார மையம் (WHO) அறிவித்துள்ளது. இதுவரை இதற்கென தனியொரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் தங்களால் முயன்ற அளவிற்கு சிகிச்சை கொடுத்து பல உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

Corono virus

BNO News வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி நேற்று மார்ச் 16 வரை உலகளவில் 1,79,467 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7,066 பேர் இதுவரை இறந்துள்ளனர். 77,936 பேர் குணமடைந்துள்ளனர். 94,465 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக சீனாவில் 67,490 பேரும் அடுத்ததாக ஈரானில் 4,996 பேரும் இத்தாலியில் 2,749 பேரும் குணமடைந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட 130 பேரில் 2 பேர் பலி, 13 பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனாவிற்கு எதிராக இதுவரை எந்தவித மருந்தும் கண்டுபிடிக்காத நிலையிலும் அனைத்து நாடுகளிலும் உள்ள மருத்துவர்கள் போராடி பல உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். நாமும் இதனை எதிர்கொள்ள முடிந்தவரையில் மருத்துவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்போம்.