வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இந்தியா-நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு நடுவே மலர்ந்த காதல்: ஐ.சி.சி வெளியிட்ட வீடியோ வைரல்..!
எட்டாவது டி-20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. டி-20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றியை சுவைத்தது.
இந்த நிலையில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று சிட்னி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வுசெய்தார். இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவின் பங்களிப்புடன் 179 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 180 ரன்கள் இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற்றத்துடன் விளையாடியது. தனது 7 வது ஓவரை நெதர்லாந்து அணி எதிர் கொண்ட நேரத்தில் போட்டியை காண வந்திருந்த ரசிகர் ஒருவர் தாஅன் காதலித்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். காதலை அந்த பெண் ஏற்றுக் கொண்ட அடுத்த நொடியே அவரது விரல்களில் மோதிரத்தை மாட்டி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த வீடியோ காட்சியை ஐ.சி.சி தனது அதிகார்வப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.