திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பக்காவாக பிளான் போட்டு திருட சென்ற திருடனுக்கு ஏடிஎம்மில் நேர்ந்த விபரீதம்!! வெளியான பகீர் சிசிடிவி வீடியோ.!
ரஷ்யாவில் ஷெரபோவெட்ஸ் என்ற நகரில் செபர் வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க இரு திருடர்கள் சென்றுள்ளனர். அங்கு ஒரு திருடர் மட்டும் வெளியில் நிற்க மற்றொருவன் உள்ளே சென்று ஏடிஎம் மிஷினை உடைக்க தீவிரமாக முயற்சி செய்துள்ளார்.
அங்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் ஏடிஎம் மிஷினை உடைக்க முடியாத காரணத்தால் அந்த திருடன் தான் கொண்டுவந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக வெடிகுண்டு திருடன் மீது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஏடிஎம் மையம் சுக்குநூறாக அது மட்டுமின்றி திருடச் சென்ற திருடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் வெடிகுண்டு சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறி ஓடிய நிலையில் வெளியே நின்ற மற்றொரு திருடனும் என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதன் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் இரு திருடர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.