மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல்முறையாக தள்ளி வைக்கப்பட்ட புகழ்பெற்ற சைக்கிள் பந்தயம்!
பிரான்சில் ஜூன் 27 ஆம் தேதி துவங்குவதாக இருந்த புகழ்பெற்ற தூர் த பிரான்சு சைக்கிள் பந்தயம் தேதி எதுவும் குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1903 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த சைக்கிள் பந்தயம் ஐரோப்பாவில் மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் இந்த பந்தயம் நடைபெறும்.
சைக்கிள் பந்தய வீரர்கள் தினமும் 218 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்வர். 21 நாட்களிலும் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு அதிக தொகையிலான பரிசுகள் வழங்கப்படும்.
காடு, மலை என கடந்து செல்லும் இந்த பந்தயத்தினை காண திருவிழா கூட்டம் போல் பார்வையாளர்கள் கூடுவர். தற்போது கொரோனா வைரஸால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையால் இந்த போட்டியினை கால வரையரையின்றி தள்ளி வைப்பதாக நிர்வாக குழுவினர் அறிவித்துள்ளனர்.
தூர் த பிரான்சு எனப்படும் இந்த பந்தயம் கடைசியாக 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது நிறுத்தப்பட்டது. அதற்கு முன்னர் முதல் உலகப்போரின் போதும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.