திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போர்க்களத்தில் மலர்ந்த பெண் பூ.. பதுங்குமிடத்தில் பிரசவம்., அழகிய பெண் குழந்தை.!
உக்ரைனின் மீது ரஷியா போர்தொடுத்து சென்றுள்ள நிலையில், ரஷிய இராணுவம் முழுவீச்சில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைன் இராணுவம் சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3 ஆவது நாளாக படையெடுப்பு அடைந்து வரும் நிலையில், உக்ரைன் மக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் என 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனின் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போரினால் உக்ரைனில் உள்ள மக்கள் மெட்ரோ இரயில் சுரங்க பாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில், போருக்கு மத்தியில் 23 வயது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
உக்ரைனின் தலைநகர் கீவ்-வில் உள்ள மெட்ரோ சுரங்கத்தில் தஞ்சமடைந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த காவல் துறையினர், மக்களின் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, பெண்ணிற்கு மெட்ரோ இரயில் சுரங்கத்தில் வைத்தே பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்ததும் அவசர ஊர்தியின் உதவியுடன் தாய் மற்றும் சேய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. குழந்தைக்கு மியா என்று பெயரிட்டுள்ளார்கள். இந்த நிகழ்வு உலகம் முழுவதிலும் தற்போது தெரியவந்துள்ளது.