மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை கொல்லப்போகிறார்கள்.. நான் இறந்துவிட்டால் இது நடக்க வேண்டும் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு பேச்சு.!
நான் கொல்லப்பட்டாலும் எனது ஆட்சி நடைபெறும். அதனை முடக்க முடியாது. ரஷியாவின் தாக்குதலை மறக்கமாட்டோம், மன்னிக்கமாட்டோம் என உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.
உக்ரைன் - ரஷியா போர் 11 ஆவது நாட்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், 4 நகரங்களில் போரை தற்காலிகமாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்பாக வெளியேற போரை நிறுத்தினாலும், உக்ரைன் படைகள் ரஷிய படைகளின் மீது தாக்குதல் நடத்துவதால் தாக்குதல் நடத்தப்படுகிறது என ரஷியா தெரிவிக்கிறது. ஆனால், ரஷியா போர்நிறுத்த அறிவிப்பை மீறி செயல்படுகிறது என்பதால் பதில் தாக்குதல் நடத்துகிறோம் என உக்ரைன் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "உக்ரைன் வான்பரப்பில் மீது விமானம் பறக்க தடை உள்ள பகுதியாக அறிவித்தால் மட்டுமே, உக்ரைன் மீது பறக்கும் ரஷிய விமானங்களை பிற நாட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தலாம். அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைனின் கோரிக்கையை ஏற்க தயங்குகிறது.
ரஷியாவின் படைகள் முக்கிய உக்ரைன் நகரங்களை முற்றுகையிட்டு உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடக்கிறது. மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனைப்போல எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் போரினை வேடிக்கை பார்க்காமல் உதவ முன்வர வேண்டும். எங்களுக்கான ஆயுதத்தை தர வேண்டும்.
ஒருங்கிணைந்த ஐரோப்பிய நாடுகள் போர் விமானங்களை வழங்க வேண்டும். என்னை படுகொலை செய்ய ரஷிய அதிபர் புதின் சிறப்பு படைகளை அனுப்பி இருக்கிறார். ரஷியாவின் உளவுப்படைகள் கீவ் நகரில் இருக்கிறது. என்னை குறிவைக்கிறார்கள். நான் எப்போதும் கொல்லப்படலாம். நான் இறந்தாலும் ஆட்சி நடைபெறும். அதனை முடக்க முடியாது. ரஷியாவின் கொலைகளை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அனைவரையும் தண்டிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.