மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Ukraine Russia War: ஹாக்கி, கால்பந்து, ஒலிம்பிக் போட்டிகளில் ரஷியா, பெலாரஸ் வீரர்கள் கலந்துகொள்ள தடை..!
ரஷியா - உக்ரைன் போர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இருநாட்டின் அமைதி பேச்சுவார்த்தை குழு பெலாரசில் சந்தித்து பேசியது. ஆனால், பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இருதரப்பிலும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், ரஷியாவை தனித்துவிட முடிவெடுத்து பல்வேறு பொருளாதார தடையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், நேற்று இரவு ரஷியாவை உலகளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதித்து பிபா உத்தரவிட்டு இருந்தது. தற்போது, சர்வதேச பனி ஹாக்கி விளையாட்டு நிர்வாகம் ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகள் ரஷியாவை போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
2023 ஆம் வருடம் சர்வதேச பனி ஹாக்கி விளையாட்டு ஜூனியர் பிரிவை ரஷியா தலைமையேற்று நடத்தவிருந்த நிலையில், அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு நாட்டில் அந்த போட்டிகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயூ ரஷிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளார்.
இதனைப்போல, சர்வதேச அளவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகள் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், ரக்பி போட்டிகளில் கலந்துகொள்ளவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனைப்போல, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷிய நாட்டுக்கு சொந்தமான விமானங்கள் உலக நாடுகளில் தரையிறங்க மற்றும் பறக்க அனுமதி வழங்க கூடாது. அதற்கேற்ப தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.