மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17-வது நாளாக நீடிக்கும் போர்.! பொதுமக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ரஷ்ய தாக்குதல்.! உணவுக்காக சண்டையிடும் உக்ரேனியர்கள்.!
உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து 17-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் இந்த போரில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். மேலும், போர் காரணமாக பல லட்சம் மக்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
ஆனாலும் பல லட்சம் மக்கள் தாயகத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே உள்ளனர். இந்த போர் 17-வது நாளாக நீடித்து வரும் நிலையில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் உக்ரைன் மக்கள் தவித்து வருகின்றனர்.
பல லட்ச கணக்கான மக்கள் வாழும் மரியுபோல் நகரம், ரஷிய படைகளின் தாக்குதல்களால் அப்பகுதி மக்கள் உணவுக்காகவும், அத்தியாவசிய பொருளுக்காகவும் வீதிகளில் அலைந்து வருகின்றனர். மேலும் உணவுக்காக ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் அவலநிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.