மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துப்பாக்கி முனையில் பயணிகளை கடத்திய மர்ம நபர்.. போலீசார் தீவிர விசாரணை!
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரேசிலின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வருகின்றனர். அங்கிருந்து மினாஸ் ஜெரைஸூக்கு புறப்பட பேருந்து ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்தில் மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் ஏரியுள்ளார். மேலும் பேருந்தில் இருந்த பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பயண கைதிகளாக வைத்திருந்தார். அந்த பேருந்தில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட பலர் இருந்துள்ளனர்.
இதனிடையே அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு பேருந்து நிலையத்தை சுற்றி ஓட தொடங்கினர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரிடம் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பயணிகளை விடுவித்து போலீசில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.