கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
குமரி - திருப்பதி தூரத்திற்கு ஒரே மின்னல்.. அமெரிக்காவில் அசாதாரண இயற்கை நிகழ்வு.!
கடந்த 2020 ஆம் வருடம் ஏப்ரல் 29 ஆம் தேதி அமெரிக்காவின் தென்பகுதியில், வானில் ஏற்பட்ட மின்னல் புதிய உலக சாதனை செய்துள்ளதாக ஐ..நா சபை தெரிவித்துள்ளது.
இந்த மிகப்பெரிய மின்னல் அமெரிக்காவின் மிஸிஸிபி, லூசியானா, டெக்சர்ஸ் மாகாணம் என மொத்தமாக 770 கி.மீ தூரம் தெரிந்துள்ளது என உலக வானிலை அமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால் கன்னியாகுமரியில் இருந்து திருப்பதி தூரம் ஆகும்.
கடந்த 2018 அக். 31 ஆம் தேதியில் தெற்கு பிரேசில் நாட்டில் பதிவான மின்னலை விட, கூடுதலாக 60 கி.மீ பயணம் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் இயற்கையின் அசாதாரண பதிவுகளில் ஒன்றாகும்.