பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரதமர் மோடியை சந்திக்கும் அந்த ஒரு நாளுக்காக காத்திருக்கிறேன் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!
வரும் மே மாதம் 24 ஆம் தேதி ஜப்பானில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என அமெரிக்கா அதிபர் பேசினார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையேயான 2 + 2 ஆலோசனை கூட்டம் அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் நகரில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் காணொளி வாயிலாக உரையாடினார்கள்.
அப்போது பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "உக்ரைனில் உள்ள புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டது கவலையை அளிக்கிறது. இந்த விஷயத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இருநாட்டு போர் பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பு ஏற்படும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், "உக்ரைன் நாட்டு மக்களுக்கு இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிகளுக்கு பாராட்டுக்கள். போரினால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து, நிலைமையை சமாளிக்கும் விஷயத்தில் தொடர்ந்து இணைந்து நாம் பணியாற்றுவோம். வரும் மே மாதம் 24 ஆம் தேதி ஜப்பானில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.