வெவ்வேறு தடுப்பூசிகளை போடுவது ஆபத்தானது.! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.!



WHO talk about different vaccine

கொரோனா தொற்றை தடுக்க இரு வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் சவுமியா செய்தியாளர்களிடம் பேசுகையில், பல நாடுகளில் கொரோனா 2ஆவது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 3ஆவது அலை குறித்த எச்சரிக்கையும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதம் ஆகும். இங்கே கொரோனா தடுப்பூசிகளைப் பொருத்தமட்டில் ஒரு ஆபத்தான போக்கு உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவது, பொருத்திப் பார்ப்பதெல்லாம் நடக்கிறது. இது ஆபத்தானது. இது தொடர்பாக நம்மிடம் தரவுகள் இல்லை. ஆதாரங்கள் இல்லை. உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும்.

corona

2ஆவது, 3ஆவது, 4ஆவது டோஸ் தடுப்பூசிகளை எப்போது யார் போட்டுக்கொள்வது என்று மக்கள் தீர்மானிக்கத் தொடங்கினால், அது நாடுகளில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். இது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன, அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.